மஹிந்தவை ‘கிழட்டு மைனா’ என விமர்சிப்பவர்களுக்கு நாமல் வழங்கியுள்ள பதிலடி…(காணொளி)

” எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே ‘அறகலய’ (போராட்டம்) களம் செயற்பட்டது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

” மஹிந்த ராஜபக்ச என்ற நாமத்தை சிதைப்பதற்கு முற்பட்டனர். அதனால்தான் அவர் விகாரைக்கு செல்வதைக்கூட நகைச்சுவை விடயமாக மாற்றியமைத்தனர்.

எனது தந்தையை (மஹிந்த ராஜபக்ச) கிழட்டு மைனா என விமர்சிப்பவர்கள், அவர்களின் பெற்றோரையும் கிழட்டு மைனா எனக் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என நான் கூறியிருந்தேன். அப்படியான சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இதனால்தான் அவ்வாறானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தேன்.

போராட்டக்களத்தில் இலங்கை சிங்கள, பௌத்த நாடு அல்ல என்றார்கள். அநீதிகளைக்கூட நியாயப்படுத்தும் வகையிலான செயற்படுகள் அங்கு இடம்பெற்றன.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles