மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது நாட்டின் பொறுப்பாகும்!

வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவ பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்பு தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்று அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் நந்திக்கடலில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் சர்வதேச ரீதியில் அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் ஏராளம். போர் இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்கூட இதன்ஓர் அங்கம்தான்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் மஹிந்தவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லையென எவராலும் கூற முடியாது. எனவே மஹிந்தவை பாதுகாக்க வேண்டியது நாட்டின் கடப்பாடாகும்.

76 ஆண்டுகால சாபத்துக்கு முடிவுகட்டதான் அநுரவை ஜனாதிபதியாக்கினார்கள். எனவே, அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மாளிகை பகுதிகளில் உள்ள வீதிகளில் இருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டதன் நோக்கம் என்ன?
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்த இராணுவ பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்தி சூழ்ச்சி செய்கின்றனரா என்பது பற்றி பாதுகாப்பு தரப்பினர் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் புலிகள் காடு மாறினாலும் அதன் உடலில் உள்ள புள்ளிகள் மாறாது என்பார்கள்.

ஜனாதிபதி செயலக வீதிகளை திறக்க முடியும் என்றால், திவுலபத்தான வீதியை ஏன் திறக்க முடியாது” – என்றார் தேரர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles