மஹிந்த, சமல், பஸில், நாமல் தேர்தலில் இல்லை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது.

அத்துடன், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் களமிறங்கவில்லை என தெரியவருகின்றது. நாமல் ராஜபக்சவின் பெயர் தேசிய பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் அமெரிக்கா பறந்த பஸில் ராஜபக்சவும், தேர்தலை வழிநடத்த நாடு திரும்பமாட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.

எனினும், ராஜபக்ச குடும்பத்தில் ஷசீந்திர ராஜபக்ச மொனறாகலை மாவட்டத்திலும், நிபுன ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles