மாகாணசபைகளுக்கான தேர்தல் தற்போதே இடம்பெறமாட்டாது என மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
” நாட்டில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. உடனடி தேர்தலும் சாத்தியமில்லை. நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பின பின்னரே தேர்தலுக்கான சாத்தியப்பாடுகள் பற்றி ஆராயப்படும்.” – எனவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, 2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
