மாணவி கொலை – சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!

ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல பாடசாலை மாணவி ஒருவர், பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் உடுவரையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் பதுளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் 3 சாட்சியங்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அடையாள அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களில் 2 சாட்சியங்களை சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles