சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கிலன்டில் தோட்ட பெரிய நாடு தோட்ட பிரிவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய பட்டு எதிர் வரும் 11ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர்