மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது!

பெற்றசோ தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுடன் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 25 முதல் 35 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள்.

கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்

Related Articles

Latest Articles