மாத்தளை மாநகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

மாத்தளை மாநகர சபையின் 2022 க்கான வரவு செலவுத்திட்டம் மாநகரசபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பூரண ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் நேற்று முற்பகல் (15.12.2021) 10.30 மணியளவில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சபை அமர்வின் போதே வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷின் நீண்ட நேர வாசிப்புக்கு பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மாநகர பிதா உட்பட 21 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க மாத்தளை மாநகர சபையின்
2022ற்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Articles

Latest Articles