மார்ச் 31 ஆம் திகதி இலங்கை வருவாரா மோடி? அழைப்பு விடுத்தார் கோட்டா

எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.

” பிம்ஸ்டெக் அமைப்பில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அந்தவகையில் அரச தலைவர்களுக்கு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். இந்தியா சென்றபோது, பிரதமர் மோடிக்கான எமது ஜனாதிபதியின் அழைப்பை, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles