10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை விதிப்பதற்கு நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி அரிசி, மாவு, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 10இற்கு இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
6 மாத காலத்திற்கு இந்த விலை நிரணயம் அமுலில் இருக்கும் என்று நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்துள்ளார்.
நிர்ணய விலையில் பொருட்களை விநியோகிப்பதற்கான விலைமனுக் கோரல்கள் அடுத்த சில தினங்களில் கோரப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப்ரவரி மாதம் முதல் நிர்ணய விலையில் இந்த 10 அத்தியவாசியப் பொருட்களையும் நாடு முழுவதும் ச.தொ.ச. மற்றும் சமூர்த்தி விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிகிந்தலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.