மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
159 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைமூலம் 69 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைய தினமும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 32 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி இதுவரையில் (இன்று இரவு 9.40வரை) மினுவாங்கொட தொழிற்சாலை கொத்தணி பரவலால் 101 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
தொழிற்சாலை ஊழியர்கள் – 69
விடுமுறையில் சென்ற ஊழியர்கள் – 09
இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 23
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை
குருநாகல் − 02
மொனராகலை − 01
யாழ்ப்பாணம் − 01
மினுவாங்கொட − 18
கட்டான − 02
சீதுவ – 01
திவுலபிட்டி – 02
மீரிகம – 03
ஜா-எல − 01
மஹர − 01










