மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 246 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 246 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது – என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (06) தெரிவித்தார்.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு  கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு இன்று (6)  மதியம் வெளியானது. இதில் திவுலப்பிட்டிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நேற்று 101 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இன்று இதுவரையில் 446 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் 16 மாவட்டங்களில் முகவரிகளைக் கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அடுத்த 48 மணி நேரம் மிகவும் எச்சரிக்கையான காலகட்டம் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் நடத்துக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Latest Articles