மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

வார இறுதி நாட்களான நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) ஒரு மணித்தியாலமும், 14 ஆம் திகதி 2 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு மாலை 5.30 முதல் இரவு 8.30 வரையான காலப் பகுதியில் 1 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles