எல் நினோ காலநிலை சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஐ.நா. ஆதரவு

ஐ.நா. சபையின் நிரந்தரப் பிரதிநிதி மார்க் என்ட்ரூ பிரெஞ்ச் ( Marc-Andre Franche, UN Resident Coordinator) மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதற்கான அரசாங்கத்தின் தயார்நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி தெளிவுபடுத்தினார்.

அந்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகவும் மார்க் என்ட்ரூ இதன்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பங்குதாரர் மற்றும் அபிவிருத்தி நிதியியல் நிபுணர் அஸாம் பாக்கீர் மாகர் (Azam Bakeer Markar, Partnerships & Dev Finance Specialist) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மனிதாபிமான மற்றும் தாங்கும்திறன் தொடர்பான அதிகாரி வகீஷா பெரேரா ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles