லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று (24) முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்ற குளவி கொட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பெண் தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கி இருந்து சிகிச்சைப் பெற வேண்டும் எனவும், ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கௌசல்யா










