வனுவாட்டுவில் இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; சுனாமி எச்சரிக்கை

பசுபிக் நாடுகளுள் ஒன்றான வனுவாட்டு தீவுகளுக்கு அப்பால் கடற்பகுதியில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிழக்கு நிலையான நேரப்படி (AEST) சனிக்கிழமை நண்பகல் 12.31 மணியளவில், சோலா (Sola) நகருக்கு மேற்கே சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் 6.3 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள கரையோரப் பகுதிகளில் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

ஆரம்பகட்ட எச்சரிக்கையில் வனுவாட்டு பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

“அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய கரையோரப் பகுதிகளில் வசிப்போர் விழிப்புடன் இருப்பதுடன், தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்” என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

எனினு ஆஸ்திரேலியாவுக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், முதலாவது நிலநடுக்கத்தின் அளவை ஆரம்பத்தில் 7.2 ரிக்டராகப் பதிவுசெய்திருந்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் மதிப்பீட்டில் அது 6.9 ரிக்டராகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles