வரவு – செலவுத் திட்டத்துக்கு முன்னர் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் துறைசார் அமைச்சர் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியவை வருமாறு,
” மின் கட்டணம் அதிகரிப்பை ஏற்கமுடியாது. அது குறைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். இது தொடர்பில் பாதீட்டுக்கு முன்னர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.
போராட்டத்துக்கு பின்னர் சவாலான காலகட்டத்திலேயே அவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பதவியை ஏற்றிருந்தார். சிறப்பாகவும் செயற்பட்டுவருகின்றார். எனவே, மக்கள் பக்கம் நின்று முடிவொன்றை எடுக்க வேண்டும்.” – என்றார்.










