மின் துண்டிப்பால் இணையவழி கற்பித்தல் பாதிப்பு-ஆசிரியர் சங்கம்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலாக்கப்படும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இணையவழி கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை செயற்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்படுவதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நேரங்களில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதால், தொலைதூர பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் மின்வெட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles