மியன்மார் இராணுவ ஆட்சியை ஏற்குமா இலங்கை?

மியன்மார் விவகாரம் தொடர்பில் இலங்கை மௌனம் காகக்கூடாது. இது விடயத்தில் துரிதமான செயற்பாடுகள் அவசியம் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர்,

” மியன்மார் நிலைவரம் தொடர்பில் அரசின் கவனத்தை ஈர்க்க விளைகின்றேன். ஆங் சாங் சூகி உள்ளிட்டவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மியன்மாரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகிதான் வெற்றிபெற்றார். ஜனநாயகத்தை ஏற்படுத்தியவர் அவரே.

மியன்மார் தொடர்பில் ஆசிய நாடுகள்கூட துரிதமாக செயற்பட்டுள்ளன. ஆசிய நாடுகள் மியன்மார் ஜனாதிபதிக்குகூட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, இலங்கை மௌனம் காகக்கூடாது. மியன்மார் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles