மிரிஹான பகுதியில் பலத்த பாதுகாப்பு

போராட்டம் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு போராட்டத்தின் தீவிர உறுப்பினர்களால் மிரிஹான ஜூபிலி தூண் அருகே நடைபெறவுள்ள கொண்டாட்டம் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 3,000 பேர் கொண்ட விசேட அதிரடிப்படையினர் மிரிஹான பொலிசுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு எதிரான போராட்டம் நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles