மிஹிந்து செத் மெதுரவில் தங்கி சிகிச்சை பெறும் படையினரின் நலன் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்

மிஹிந்து செத் மெதுரவில் தங்கி சிகிச்சை பெறும் படையினரின் நலன் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார்.

முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி , இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். ஊனமுற்ற படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மிஹிந்து செத் மெதுரா சுகாதார விடுதியில் பணிபுரியும் மருத்துவர்கள் தலைமையிலான உத்தியோகஸ்தர்களுடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். படையினருக்கு மேலும் மருத்துவ மற்றும் சேவை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,மிஹிந்து செத் மெதுர பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. ஜீ. எஸ். டீ. எஸ். ராஜகருணா, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ. ஏ. எஸ். விஜயதாச உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles