சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில் வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது.
இதனால்பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
த.டிமேஷன்










