400 கிராம் பால் மா பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 1,240 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் மா பொதி இறக்குமதி 50% குறைந்துள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது.
டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணிகள் இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பால் மாவை இறக்குமதி செய்வதற்காக இறக்குமதியாளர்களுக்கு டொலர்களை இலகுவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.










