பதுளை, கொஸ்லந்த – மீரியபெத்த பகுதியில் இருந்து 241 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவு அபாயம் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்த எச்சரிக்கையின் பிரகாரமே ஹல்துமுல்லை, கொஸ்லந்த, மீரியபெத்த ஆகிய சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் 241 குடும்பங்கள் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீரியபெத்த பகுதியில் இதற்கு முன்னரும் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருந்தது. இதனால் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
