முகக்கவசம் அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம்!

நாட்டில் நிலவும் சுகாதார சீர்கேடு மற்றும் ஸ்திரமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணியும் பழக்கத்தை தொடருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA)பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் முகக்கவசம் அணிவது மற்றும் பொது இடங்களில் வளாகத்திற்குள் நுழையும் போது உடல் வெப்பநிலையை சரிபார்ப்பது ஆகியவை கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அதிகாரிகளால் தளர்த்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு எடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

எனினும் தொற்றுநோய்களின் போது நடைமுறையில் இருந்த அடிப்படை சுகாதார நடவடிக்கைகளைத் தொடருமாறு பொதுமக்களிடம் அவர் அறிவுறுத்தியுள்ளார்

முகக்கவசம் உட்பட்ட சுகாதார நடைமுறைகள் காரணமாக சுவாச அமைப்பு தொடர்பான நோய்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டிருந்தாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்

இந்தநிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், போராட்டங்கள் மற்றும் பிற குழு நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று ஷெனால் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles