“முஜிபூர் ரஹ்மானை பலிக்காடாவாக்கிவிட்டார்கள்” – ஜனாதிபதி

” உங்களை பலிக்கடாவாக்கிவிடுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என முஜிபூர் ரஹ்மானுக்கு நானும் தகவல் அனுப்பினேன்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

” முஜிபூர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்தேன். அவர் தொடர்ந்தும் எம்.பியாக இருப்பதை விரும்பினேன்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, எம்.பி. பதவியை முஜிபூர் ரஹ்மான் இராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles