முடிந்தால் வென்று காட்டுங்கள் – எதிரணிகளுக்கு மொட்டு கட்சி சவால்

“தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைக் கொண்டு நடத்தும் திறமை இல்லை.”

– இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜானக வகும்புர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் ஒத்திப்போடுவதாகக் கூறவில்லை. எதிர்க்கட்சிகள்தான் அப்படி நாம் செய்யப்போவதாகக் கூறித் திரிகின்றன.

இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுபவர்கள் நிச்சயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பாதவர்கள். அவர்களால் வெல்ல முடியாது. தோல்விப் பயம் காரணமாகவே அவர்கள் உளறுகின்றார்கள்.

அவர்கள்தான் ஆட்சியைக் கைப்பற்றும் – ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றும் ஆசையுடன் இருப்பவர்கள்.

முடிந்தால் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 50.1 வீத வாக்குகளை எடுத்துக் காட்டட்டும் என்று சவால் விடுக்கின்றேன்” – என்றார்.

Related Articles

Latest Articles