நாட்டில் நீண்ட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், முதலாம் தவணை விடுமுறையை முன்கூட்டியே வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறையை வழங்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
