முதலாவது மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 8 தமிழர்கள்

1988 ஏப்ரல் 28 ஆம் திகதியே (இதேபோன்றதொரு நாளிலே) இலங்கையில் முதன் முதலாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கே அத்தினத்தில் தேர்தல் நடைபெற்றது.

மேற்படி நான்கு சபைகளிலும் ஐக்கிய தேசியக்கட்சியே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட மேலும் சில கட்சிகள் குறித்த தேர்தலை புறக்கணித்திருந்தன. 1988 ஜுன் 2 ஆம் திகதி மத்திய மற்றும் மேல்மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெற்றது.

இலங்கையில் தற்போது மாகாணசபை முறைமை அமுலில் இருந்தாலும் – மாகாணசபைகளின் செயற்பாடுகள் நடைபெற்றாலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அவர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுவருகின்றன.

இலங்கையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒவ்வொரு பகுதியாக தகவல்களை வழங்கவுள்ளேன். அந்தவகையில் இன்றைய தினம் மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டம் பற்றிய முக்கிய சில தகவல்கள் வழங்கப்படுகின்றன.

1988 தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு 56 உறுப்பினர்கள் வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்பட்டனர். இரண்டு போனஸ் ஆசனங்கள். நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 17 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

🛑 நுவரெலியா மாவட்டம் – 1988

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை – 220,660
அளிக்கப்பட்ட வாக்குகள் – 162,593 (73.68 %)
செல்லுபடியான வாக்குகள் – 140,362
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 22,231 (13.67%)
தேர்தல் தொகுதிகள் – நுவரெலியா, கொத்மலை, ஹங்கராங்கெத்த, வலப்பனை
ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகள் – 98,863 ( 70.43%)
ஐக்கிய சோஷலிச முன்னணி (எக்சத் சமாஜவாதி பெரமுன) – 38,312 (27.30%)
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 3187 (2.27%)
ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும், ஐக்கிய சோஷலிச முன்னணி 5 ஆசனங்களையும் கைப்பற்றின. ஐ.தே.கவில் இருந்து ஆறு தமிழர்கள் தெரிவாகியிருந்தனர்.

1.தொண்டமான் ராமநாதன் – 25,436
2.பண்டா சமரதுங்க – 15.645
3.வீ. பண்டார ரணதுங்க – 14,304
4.எஸ். சதாசிவம் – 14,103
5.எஸ்.ஏ. கந்தசாமி – 12,925
6.ஏ. கதிரேசன் – 12,634
7.அமரபால – 12,415
8..ஹேரத் முதியான்சலாகே செனவிரத்ன
பண்டா ஹேரத் – 12,126
9. சின்னசாமி ராஜு – 11,732
10. பத்மசிற ஹேமசந்திர – 10,874
11. தர்மசிறி திலகரத்ன – 10,870
12.அபயதுங்க – 9,120
வடிவேல் புத்திரசிகாமணி (நியமனம்)
ஐக்கிய சோஷலிச முன்னணி
1. நந்தசேன – 6,620
2.வெல்லசாமி கந்தையா – 5,442
3.குணசிங்க – 5,388
4.ஆறுமுகன் ராமையா – 5,095
5. ரத்னாயக்க – 4,489

நுவரெலியா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆசனம் எதையும் கைப்பற்றவில்லை. எனினும், கண்டி மாவட்டத்தில் இரு ஆசனங்களையும், மாத்தளையில் ஒரு ஆசனத்தையும் அக்கட்சி கைப்பற்றியது.

Related Articles

Latest Articles