ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இன்னும் வரவில்லை. ஜனாதிபதி தேர்தல் முதலில் என்பது உறுதி. ஒக்டோபர் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படக்கூடும்.
நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அதிகாரம் உறுப்பினர்களுக்கு இருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. எனவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேவையற்ற பிரச்சினைக்கு அவர் வழிசமைக்கமாட்டார். ஆளுங்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலையே முதலில் கோருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணையவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் சலூன் கதவும் திறந்தே உள்ளது.” – என்றார்.
