அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மஅரசியலுக்கு கனான ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக ரோஹித ராஜபக்ச போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

” எனது தந்தை பொதுத்தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். தேர்தல் காலத்தில் நானும் இருந்தேன். எனவே, மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றவும், தந்தைக்கு உதவுவதற்காகவுமே குருணாகல் மாவட்டத்தில் மக்கள் சேவையில் ஈடுபடுகின்றேன். மாறாக முதலமைச்சர் ஆவதற்கு அல்ல. மக்கள் சேவைகளுக்கு எனது பங்களிப்பு தொடரும். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.” எனவும் ரோஹித ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.










