வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி வரலாற்றில் முதல் தடவையாக பன்விலை கல்விக் கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொடுத்த மடுல்கலை க .வத்/ பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவி ஆனந்தராஜா மேனுஜா உட்பட்ட ஏனைய மாணவர்களை பாராட்டும் விழா வித்தியாலயத்தின் அதிபர் பரமானந்தன் சிவாநாந்தன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.
இதில், இ.தொ.கா வின் உபதலைரும் பிரஜா சக்தியின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். 9A சித்திகளைப்பெற்ற மாணவி ஆனந்தராஜா மேனுஜா மற்றும் மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
