முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 16 வயதுடைய மலையக சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணியளவில் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட டயகம பகுதியே இச்சிறுமியின் வாழ்விடம். 6 சகோதரர்களைக்கொண்ட குடும்பத்தில் இவர் மூன்றாவது பிள்ளையாக பிறந்துள்ளார். அப்பகுதியில் உள்ள தரகர் ஒருவர் ஊடாகவே கடந்த ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலைக்குச்சென்றுள்ளார்.