தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார்.
அத்துடன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஹட்டன், டிக்கோயா,என்பீல்ட்,ஒட்டரி பிரதேசத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆகியோர் பிரதம அதிதிகளாக பங்கேற்றுள்ளனர்.










