முஸ்லிம் பாடசாலைகளுக்கு ‘ஜூன் 30’ விசேட விடுமுறை

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

நாளைமறுதினம் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக அடுத்த மாதம் 8 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles