மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு

முன்னூறு அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடையை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க அடுத்த வாரம் முதல் இதை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமானது கடந்த ஜூன் (09) முதல் இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் சில உணவுப் பொருட்கள் உள்ளிட்ட முன்னூறு பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இதையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வாகனங்கள் இறக்குமதிக்கான அனுமதியையும் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு இதற்கான அனுமதியை இப்போதைக்கு வழங்க முடியாது என நிதியமைச்சு அவர்களுக்குப் பதிலளித்தது.

நாட்டின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியதும் வாகன இறக்குமதியாளர்களின் கோரிக்கை தொடர்பில், கவனம் செலுத்தப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles