முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதை தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(04) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.