ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப்பெறக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க வருவார். எனவே, யானை சின்னம் மாறக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சி வசம் 30 லட்சம் வாக்குகள் உள்ளன. அந்த எண்ணிக்கையில் இருந்துதான் வாக்கு வேட்டை ஆரம்பமாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குரிய 69 லட்சம் வாக்குகளில் 39 லட்சம் கிடைத்தாலேயே ரணிலின் வெற்றி உறுதியாகிவிடும்.” – என்றார்.
