ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கட்சி எடுத்துள்ள தீர்மானம் மீளப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தை நீக்கிவிட்டு, அப்பதவிக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.