மொட்டு கட்சி வசமே பலமான அரசியல் கட்டமைப்பு – நாமல் அறிவிப்பு

” இலங்கையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசமே பலமானதொரு அரசியல் கட்டமைப்பு உள்ளது. அதனால்தான் எமதுகட்சிமீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” களவு, கொள்ளையென்றெல்லாம் ராஜபக்சக்களுக்கு எதிராக கடந்தகாலங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜபக்சக்களுக்கு வெளிநாடுகளில் சொத்துகள், கணக்குகள் உள்ளன என்றும் கூறப்பட்டது.ஆனால் அவை போலியான என்பது உறுதியாகியுள்ளது.

நல்லாட்சியின்போது விசாரணை நடத்தப்பட்டது, எனினும், வெளிநாட்டில் கணக்கு இருப்பு இருப்பது கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அதேபோல ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவர்கள் விடுதலையாகினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார். நல்லாட்சியின்போது இவர்களே ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகித்தனர்.

எனவே, நாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அவசியம். அது நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டால் முழு ஆதரவு வழங்கப்படும். அத்துடன், போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற சரத்தும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமே பலமான அரசியல் கட்டமைப்பு – பொறிமுறை உள்ளது. அதனால்தான் கட்சிமீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles