‘மொயின் அலி ஊடாகவே இலங்கைக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா’

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலிக்கே புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என இலங்கையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் பரவிய புதிய புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ள ஒருவருக்கு தொற்றியுள்ளமை ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வுமூலம் நேற்று கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் இருந்துவந்த ஒருவருக்கே புதியவகை வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அதனை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்  குறித்த தொற்றாளர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி என தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கடந்த 3 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்படி மொயின் அலிக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

Paid Ad