மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூராமல் இருப்பது ஏன்?

மொழி உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளான பொகவந்தலாவ , கொட்டியாக்கலை தோட்டத்தில் பிறந்த முத்து ஐயாவு, அந்தோனி பிரான்ஸிஸ் ஆகியோரின் கல்லறைகள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது.

கொட்டியாகலை தோட்டத்திலேயே குறித்த தியாகிகளின் உடலங்கள் பு(வி)தைக்கப்பட்ட இடத்தில் கல்லறை காணப்படுகின்றது.
கல்லறை பகுதி காடாகும் அபாயம் உள்ளது. தற்போது அவர்களை எவரும் நினைவுகூராத நிலையும் காணப்படுகின்றது.

பொகவந்தலாவை பகுதியில் பல சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் இருந்தும், மலையக தியாகிகளின் நினைவிடங்கள், இவ்வாறு ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவர்கள் உயிர் தியாகம் செய்து கடந்த 02 ஆம் திகதியுடன் 66 வருடங்கள் கடந்தாலும், அன்றைய தினத்தில்கூட எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

Related Articles

Latest Articles