தமது கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் இணையுமாறு மூன்று பிரதானக் கட்சிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்று அறியமுடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பனவே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளன.
இவ்வருடம் நடைபெறும் தேர்தல்களில் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு பிரதான கட்சிகள் முயற்சித்துவருகின்றன. சிறு கட்களை வளைத்துபோடுவதற்கான பேச்சுகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையிலேயே இதொகாவுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.