கல்கமுவ மற்றும் மஹ களுகொல்லேவ ஆகிய பகுதிகளில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனது மகளுடன் கல்கமுவ கல்லேவ பகுதியிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், நேற்று(16) பிற்பகல் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது காயமடைந்த அவரது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மஹ களுகொல்லேவ பகுதியில் வயல் காணியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானைகளிடமிருந்து பயிர்ச்செய்கையைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.