தெற்கு மக்கள் வடக்குக்கு வழிபட செல்வது இனவாதம் அல்ல. அது மத நம்பிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அநுராதபுரம், தம்புத்தேகமயில் நடைபெற்ற மொட்டு கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
“ வடக்கில் இன்று போர் இல்லை. எனவே, சுதந்திரமாக நாக தீபவுக்கு செல்ல முடியும்.
அதேபோல யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்துக்கு பாத யாத்திரை வரமுடியும்.
தெற்கு மக்கள் வடக்குக்கு வழிபட செல்வதும், வடக்கு மக்கள் கதிர்காமதத்துக்கு இறை யாத்திரை செல்வதும் இன வாதம் அல்ல. அது மத ரீதியான நம்பிக்கையாகும்.” எனவும் நாமல் சுட்டிக்காட்டினார்.
எனது தந்தைதான் சுதந்திரம் பெற்றுக்கொடுத்தார். அந்த சுதந்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையாக அனுபவிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
யாழில் ஜனாதிபதி ஆற்றிய உரை மற்றும் மேற்கொண்ட நடை பயிற்சி என்பவற்றை இலக்கு வைத்தே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிடுகின்றார் என்பது புலனாகின்றது.
