யாழில் சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கு: அமைச்சர் உறுதி!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானம் மட்டும் அல்ல சர்வதேச தரத்தில் உள்ளக விளையாட்டரங்கும் அமைக்கப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17.06.2025) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” வடக்கு, கிழக்கில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தவதற்கரிய திட்டங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் வகுத்துள்ளார். இது விடயத்தில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அடிக்கடி யாழ்.மாவட்டத்துக்கு வருகின்றனர். விளையாட்டு கழகங்களைச் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்: குறைகளை கேட்டறிந்து – அவற்றை தீர்த்து வைக்கின்றனர்.

யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான சர்வதேச மைதானத்தை ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் அமைத்து, அங்கு சர்வதேச போட்டியையும் நடத்துவோம்.

கடந்த 76 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாத வடக்கு, கிழக்கு விளையாட்டுத்துறை பற்றி தற்போது புதிய கோணத்தில் சந்திக்கப்படுகின்றது.

யாழில் உள்ளக விளையாட்டு அரங்கும், பயிற்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அங்கு வாழும் இளைஞர்களின் விளையாட்டு ஆற்றலை இனங்காண்பதற்கு கடந்தகாலங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles