யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலைத் தேடிச் சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ். பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத் தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டவிசாரணைகளைத் தொடர்ந்து போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.

குறித்த நிலையம் இரசாயன ஆய்வு கூடத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டு இரசாயனங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்றுள்ளது என்று சட்ட வைத்திய அதிகாரி இன்று நேரில் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.

வாள்வெட்டு கும்பல் ஒன்றில் இயங்கும் ஒருவருக்குச் சொந்தமான வீட்டிலேயே குறித்த நிலையம் இயங்கியுள்ளது. அதனைப் பொலிஸார் முற்றுகை யிட்டபோது அங்கு எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், போதைப்பொருள் ஆய்வுகூடத்தில் பிரதான குற்றவாளி களைத் தேடி பொலிஸார் தீவிர விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த பகுதி பொலிஸாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப் பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles