யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே, நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்ட இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
180 போதை மாத்திரைகளுடன் 18, 24 ,22 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
