யாழில் 217 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி – பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுகின்றன என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் அவ்விடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் அவற்றை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறைப் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles