யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல், யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தினர், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு, தியாகிகளை நினைவுகூர்ந்தனர்.
1939 டிசம்பர் மாதம் ஆரம்பமான சம்பள உயர்வு போராட்டத்தின்போது, தொழிலாளர்களுக்காக தங்களின் உயிரையே தியாகம் செய்து, மலையக தியாதிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த – முல்லோயா கோவிந்த சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 10 ஆம் திகதியே, மலையக தியாகிகளை நினைவுகூரும் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.










